ராசிபுரம் தனியார் பள்ளியில் பழங்கால நாணயங்கள் கண்காட்சி

DSC_0852ராசிபுரம் தனியார் பள்ளியில் பழங்கால உள்நாட்டு-வெளிநாட்டு நாணயங்கள், ஸ்டாம்ப் கண்காட்சி நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் உள்ள தனியார் பள்ளியில் பழங்கால உள்நாட்டு, வெளிநாட்டு நாணயங்கள், ஸ்டாம்பு, புகைப்படங்களின் கண்காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் பார்வையிட்டு பழங்கால நாணயங்கள், புகைப்படங்களை அறிந்து கொண்டனர்.

சேர, சோழ, பாண்டியர், ரோமானியர்கள், ஆங்கிலேயர்கள், சுல்தான்கள், நவாப்புகள் போன்றவர்களின் ஆட்சி காலத்தில் இடம் பெற்றிருந்து பல்வேறு நாணயங்கள், தபால் வில்லைகள், வெளிநாடுகளின் பழங்கால நாணயங்கள், கரன்ஸிகள் போன்றவற்றை மாணவ மாணவியர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, பள்ளி நிர்வாகம் பழங்கால நாணயங்களின் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்துவந்தவர்கள் தங்களின் சேகரிப்புகளை காட்சிப்படுத்தி வைத்திருந்தனர்.

6-ம் நூற்றாண்டின் ரோமானிய நாணயங்கள், சேர, சோழ, பாண்டியர்கள் காலத்து நாணயங்கள், செப்பு காசுகள், மொகலாய மன்னர்கள், நாயக்க மன்னர்கள், நவாப்புகள், கிழக்கிந்திய கம்பெனியின் ஆங்கிலேய காலத்து நாணயங்கள், கரன்ஸி நோட்டுகள்,  டச்சு நாயணங்கள் போன்றவை இதில் இடம் பெற்றிருந்தன. மேலும் பழங்கால அரிய தபால் வில்லைகளும், புகைப்படங்களும் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. இதனை மாணவ மாணவியர்கள் வரிசையில் நின்று அறிந்து கொண்டனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!