பரமத்தி டிஎஸ்பி அலுவலகத்தை மின் வாரிய ஊழியர்கள் முற்றுகை.

Paramathi_Ebபரமத்தி வேலூரில், கைது செய்யப்பட்ட மின்வாரிய ஊழியரை விடுவிக்க கோரி, டிஎஸ்பி அலுவலகத்தை மின்வாரிய  ஊழியர்கள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்ட எஸ்பி கண்ணம்மாள் உத்தரவின்படி நாமக்கல் தனிப்படை போலீசார் கடந்த 22 ம் தேதி காலை பரமத்தி வேலூரில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்த 5 பேரை கைது செய்தனர். இதில் பரமத்தி வேலூர் பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை எதிரில், காய்கறி கடையருகே நின்று கொண்டு லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டிருந்த மின்வாரிய ஊழியர் நாகராஜன் (வயது 55) என்பவரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் மின்வாரிய ஊழியர் கைது செய்யப்பட்டதை கண்டித்து நேற்று காலை பரமத்தி வேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட நல்லூர், வேலூர், கபிலர்மலை, மோகனூர் உள்ளிட்ட உப கோட்டத்தை சேர்ந்த மின்வாரிய ஊழியர்கள், பணியாளர்கள் டிஎஸ்பி அலுவலகத்துக்கு திரண்டு வந்து, அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் மின்வாரிய ஊழியர்கள் சம்மேளனத்தை சேர்ந்தவர்கள், பரமத்தி வேலூர் டிஎஸ்பி உதயகுமாரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது கைது செய்யப்பட்ட மின் ஊழியர் நாகராஜனை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர். இதன்பேரில் நடவடிக்கை எடுப்பதாக டிஎஸ்பி உறுதி கூறியதையடுத்து மின்வாரிய ஊழியர்கள், பணியாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *