ராசிபுரம் லாட்ஜ்களில் டிஎஸ்பி திடீர் ஆய்வு.

DSC_1073
ராசிபுரம் லாட்ஜ்களில் டிஎஸ்பி ராஜன் நேற்று பிற்பகல் திடீர் ஆய்வு மேற்கொண்டார் .

ராசிபுரத்தில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளில் டிஎஸ்பி ராஜன் நேற்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

பா.ஜ. கட்சி பிரமுகர் ஆடிட்டர்  ரமேஷ் படுகொலை சம்பவத்தையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ராசிபுரம் நகரில் உள்ள லாட்ஜ்கள் அனைத்திலும் டிஎஸ்பி ராஜன் புதன் கிழமை ஆய்வு மேற்கொண்டார் .விடுதியில் தங்கியிருந்தவர்கள் அனைவரையும் விசாரித்து எந்த நோக்கத்திற்கு வந்துள்ளனர் ? . சரியான விலாசம் கொடுத்துள்ளளார்களா ? . என துருவி. துருவி விசாரித்தார். சந்தேகப்படும் வகையில் இருந்த நபர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியவர்கள் ஆகியோரை அழைத்து சென்று விசாரனை செய்தார். மேலும் அறிமுகமற்ற நபர்கள் முழுமையான விலாசம் தராதவர்கள் ஆகியோருக்கு அறைகள் வாடகைக்கு விடக்கூடாது என விடுதி நிர்வாகிகளிடம் எச்சரித்தார்.எஸ்.எஸ்.ஜ அன்புராஜ் மற்றும் போலீசார் உடன் சென்றிருந்தனர் .

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!