பரமத்தி வேலூர் இரட்டை கொலை வழக்கில் கூலிப்படையைச் சேர்ந்த 3 பேர் கைது.

    vellure_Murder-Accநாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள காந்தமலை முருகன் கோயில் அருகே வசித்து வந்தஜோதிடர்  ரங்கநாதன் மற்றும் அவருடன் வசித்து வந்த மணி(எ) வளர்மதி ஆகிய இருவரும் கடந்த ஜூன் மாதம் 29 ம் தேதி மர்ம நபர்களால் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இக் கொலை சம்பவம் குறித்து மோகனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் இக்கொலை தொடர்பாக ரங்கநாதனின் சகோதரி சந்திரா மற்றும் காட்டுபுத்தூரைச் சேர்ந்த சிவசெல்வராஜ் ஆகிய இருவரையும் கடந்த 22 ம் தேதி காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கூலிப்படையைச் சேர்ந்த சிலரை காவல்துறையினர் தேடிவந்தனர்.இந்நிலையில் இன்று காட்டுப்புத்துரைச் சேர்ந்த செந்தில்(எ)ராஜா, திருச்சியைச் சேர்ந்த மதன்குமார், திருவண்ணாமலையைச் சேர்ந்த சையதுபாபு ஆகிய மூவரையும் மோகனூர் காவல்துறையினர் கைது செய்து நாமக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி மூவரையும் பதினைந்து நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து மூவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!