ராசிபுரம் அருகே கிணற்றில் வேலை செய்யும்போது தவறி விழுந்து தொழிலாளி பலி.

death2ராசிபுரம் அருகே கிணற்றில் வேலை செய்யும்போது கயிறு அறுந்து கிணற்றின் உள்ளே விழுந்த தொழிலாளி பலியானார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள நாமகிரிப்பேட்டை கிழக்கு தெருவை சேரந்தவர் முருகன்(45). இவரது மனைவி தேன்மொழி. இவர்களுக்கு இளமதி என்ற மகள் உள்ளார். கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் இளமதிக்கு திருமணம் நடந்து.  முருகன் தனது குடும்பத்துடன், வெள்ளக்கல்பட்டி அடுத்த காட்டூர் தியாகராஜன் கோழிப்பண்ணையில் தங்கிருந்து கடந்த 15 வருடங்களாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் முருகன், தோட்டத்து கிணற்றில் மோட்டர்  இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். மேலே வரும்போது, கயிறு அறுந்து உள்ளே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் முதுகில் பலத்தகாயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தேன்மொழி கொடுத்த புகாரின் பேரில், நாமகிரிப்பேட்டை காவல் உதவியாளர் லதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!