ராசிபுரம் அருகே போலி டாக்டர்கள் இருவர் கைது

rasipuram_Forgery_Doctorsநாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள நாமகிரிப்பேட்டை அடுத்த முள்ளுக்குறிச்சியில் போலி டாக்டர்கள் இருப்பதாகவும் அவர்கள் மருந்துகடைகளுக்குள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாகவும் ஆயில்பட்டி காவல் நிலையத்திற்கு புகார் வந்தது. இதுகுறித்து காவல் ஆய்வாளர் (பொ) ஆரோக்கியராஜ் விசாரணை மேற்கொண்டார். நேற்று முள்ளுக்குறிச்சி பகுதியில் காவலர்களுடன் திடீர் சோதனை மேற்கொண்டார். அப்போது, இரண்டு மருந்து கடைகளுக்கு உள்ளே சிகிச்சைகள் அளிக்க வசதிகள் செய்யப்பட்டிருபது  கண்டுபிடிக்கப்பட்டது. விசாரித்தபோது, உடல் நலக்குறைவால் மருந்து வாங்க வரும் நோயாளிகளுக்கு மருந்து கடையின் உள்ளே ரகசியமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து மருந்து கடை உரிமையாளர்களான நாரைக்கிணறு பிரிவு ரோடு பகுதியைச் சேர்ந்த தாமரைச்செல்வன், நாமகிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அக்பர் ஆகிய இருவரையும் ஆயில்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க  பயன்படுத்திய பொருட்களையும் காவல்துறையினர் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட போலி டாக்டர்கள் ராசிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி இருவரையும் பதினைந்து நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!