ராசிபுரத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நூற்றுக் கணக்கான மாணவர்கள் பங்கேற்பு.

Rasipuram news 1 photoராசிபுரம் நகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி  நடைபெற்றது. தமிழகத்தில் பருவ மழை குறைந்து நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து போனதால் பலவேறு இடங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  இதனால் நீலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மீண்டும் தீவிரமாக அமல்படுத்துவதில் அரசு தீவிரம் காட்டிவருகிறது.

 இந்நிலையில் ராசிபுரம் நகராட்சி அலுவலகம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. முன்னதாக நகராட்சி நடுநிலைப்பள்ளி முன்பாக துவங்கிய பேரணியை நகர்மன்ற தலைவர் .பாலசுப்பிரமணியம் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் பேண்ட் வாத்தியங்கள் முழங்க திரளான பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்று மழைநீரின் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் தட்டிகள் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பிவாறும் நகரின் பழையபஸ்நிலையம் கடைவீதி முக்கியவீதிகள் வழியாக சென்றனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *