நாமகிரிப்பேட்டை அருகே குடிசை வீட்டில் தீ விபத்து ரூ. ஒரு லட்சம் பொருட்கள் சேதம்

burned house 2ராசிபுரத்தை அடுத்துள்ள நாமகிரிப்பேட்டையில்  குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதில் ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.

ராசிபுரத்தை அடுத்துள்ள நாமகிரிப்பேட்டை அடுத்த சீராப்பள்ளி மூலச்சி பனங்காடு, பண்ணகவுண்டர்காடு பகுதியை சேர்ந்த காளியண்ணகவுண்டர் மகன் பெரியசாமி(70). இவரது மனைவி தாயம்மாள். இவர்களது குழந்தைகளுக்கு திருமணமாகியதால் இருவரும் தனியாக வசித்து  வருகின்றனர். பெரியசாமி வயலில் குடிசைவீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் கணவன் மனைவி இருவரும் வெளியே சென்றிருந்தபோது குடிசை வீட்டில் தீ பிடித்துக்கொண்டது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். ஆனால், வீட்டில் இருந்த ரொக்கம் ரூ. 15 ஆயிரம், ரேஷன்கார்டு, கேஸ் பாஸ்புக் உள்பட ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. இது குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். மின்கசிவால் விபத்து நடந்திருக்கலாம் என தெரிகிறது.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!