திருச்செங்கோட்டில் மாநில மகளிர் கைப்பந்து போட்டி - சென்னை ஜஸ்டீஸ் பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி முதலிடம்.

State_Valley_Ball_@_Tiruchengode
முதலிடம் பெற்ற சென்னை ஜஸ்டீஸ் பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி (JBAS) அணிக்கு கோப்பையும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான 10 வது மகளிர் கைப்பந்து போட்டிகள் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இந்த போட்டிகளில் தமிழகம் முழுவதும் இருந்து 10 கல்லூரிகளின் அணிகள் பங்கேற்றன.இந்த பத்து அணிகளும்

இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் மற்றும் நாக்கவுட் முறையில் போட்டிகள் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை ஜஸ்டீஸ் பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி (JBAS) அணியும், சென்னை செயின்ட் ஜோசப் கல்லூரி அணியும் மோதின.இந்த போட்டியில் சென்னை ஜஸ்டீஸ் பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி (JBAS) அணி 21:25, 25:23, 25:20, 25:10 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று முதலிடம் பெற்றது.செயின்ட் ஜோசப் கல்லூரி அணி இரண்டாம் இடம் பெற்றது. இதேபோல் மற்றொரு ஆட்டத்தில் சென்னை பனிமலர் கல்லூரி அணியும், கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரி அணியும் மோதின இந்த போட்டியில் கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரி அணி 28:26, 25:23 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாம் இடம் பெற்றது.இந்த போட்டியில் சிறந்த செட்டராக (Setters) சென்னை ஜஸ்டீஸ் பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி (JBAS) அணியைச் சேர்ந்த பூவிதா , சிறந்த லிபிரோ (Liberos) வாக சென்னை ஜஸ்டீஸ் பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி (JBAS) அணியைச் சேர்ந்த ராஜேஸ்வரி, சிறந்த டிபெண்டராக( Defender) சென்னை, செயின்ட் ஜோசப் கல்லூரி அணியைச் சேர்ந்த சத்தியபாமாவும் தேர்வு செய்யப்பெற்றனர்.வெற்றி பெற்ற அணிகளுக்கு கேடயம், பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முன்னதாக இப்போட்டிகளை ,திருச்செங்கோடு நகராட்சி சேர்மேன் பொன் சரஸ்வதி, தொழிலதிபர் ஜான்சன்ஸ் நடராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை அங்கப்பன், நாமக்கல் மாவட்ட கைப்பந்து கழகம், திருச்செங்கோடு கைப்பந்து குழு ஆகிய செய்திருந்தனர். பரிசளிப்பு விழாவில் குட்டி குரூப் நிறுவனங்களின் இயக்குநர் குணசேகரன், ரோட்டரி ரெட்ராக் சங்கத்தின் தலைவர் செந்தில்குமரன், திருச்செங்கோடு ரோட்டரி சங்க செயலாளர் கார்த்திகேயன், தொழிலதிபர்கள் சண்முகசுந்தரம், முருகையன், நாமக்கல் மாவட்ட கைப்பந்து கழகத்தின் நிர்வாகி ராஜா,எட்ரனல் ஸ்போர்ட்ஸ் அகாடமி இயக்குநர் சிந்தியா பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

About The Author

You might be interested in

Comment (1)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!