தமிழ்நாடு முழுவதும் வணிகம் செய்ய, விற்பனைக்குழு ஒற்றை உரிமம் பெற வியாபாரிகள் விண்ணப்பிக்கலாம்

திருச்செங்கோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரகாஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

          தமிழ்நாடு அரசு வேளாண்மை விளைபொருள் விற்பனை (ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 1987-ன் படி அறிக்கையிடப்பட்ட வேளாண் பொருட்களில் வணிகம் செய்யும் வணிகர்கள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் விற்பனைக் குழுவின் உரிமம் பெற்றே வியாபாரம் செய்ய வேண்டும். அவ்வாறு சேலம், நாமக்கல் மாவட்டத்தில் பெற்ற உரிமம் சேலம் விற்பனைக் குழுவின் அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே செல்லத்தக்கதாகும். இதனால் அருகில் உள்ள கோவை, ஈரோடு, திண்டுக்கல், திருப்பூர் போன்ற பகுதிகளிலும் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் வ

ணிகம் செய்ய தனித்தனியே உரிமம் பெற வேண்டிய நிலை வணிகர்களுக்கு இருந்து வந்தது.

         தற்போது மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே சந்தை என்ற இலக்கினை அடையும் வகையில் தமிழகம் முழுவதும் வணிகம் செய்ய ஒரே உரிமம் பெற்றால் போதும் என்ற சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி வழங்கப்படும் ஒன்றுப்பட்ட ஒற்றை உரிமத்தை பெற தற்போது விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதால் விருப்பமுள்ள வணிகர்கள் உடனடியாக திருச்செங்கோடு அடுத்த உஞ்சனையில்  அமைந்துள்ள திருச்செங்கோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை அனுகலாம் அல்லது 9750272977 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம் . மேலும் இந்த ஒன்றுபட்ட ஒற்றை உரிமத்தை பெறும் வணிகர்கள் தேசிய வேளாண் சந்தை திட்டம் மூலம் இந்தியா முழுவதும் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் நடைபெறும் ஆன்லைன் ஏலத்தில்கலந்து கொள்ளலாம்.

எனவே அனைத்து வியாபாரிகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஒன்றுபட்ட ஒற்றை உரிமம்பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!