திருச்செங்கோட்டில்,விவசாயிகள் நல்வாழ்வு பணிமனை – எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

திருச்செங்கோட்டில் தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை சார்பில் மத்திய அரசின் கிராம சுயராஜ் அபியான் – கிஷான் சம்மேளனம் திட்டத்தின் கீழ் விவசாயிகள் நல்வாழ்வு பணிமனை நடந்தது. திருச்செங்கோடு வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் அலுவலக வளாகத்தில் நடந்த இந்த முகாமினை திருச்செங்கோடு எம்.எல்.ஏ பொன் சரஸ்வதி தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த பணிமனை முகாமில் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு வழங்கும் திட்டங்கள், மானியங்கள் குறித்தும், விதை நேர்த்தி, ஒருங்கிணைந்த பண்ணையம் செய்தல், உற்பத்தி பெருக்குதல் வழிமுறைகள், விவசாயத்திற்கு என வந்து நவீன தொழில்நுட்பங்கள், வறட்சி காலங்களில் கால்நடைகளுக்கு எளிய முறையில் தீவன உற்பத்தி செய்யும் வழிமுறைகள், பட்டுக் கூடு உற்பத்தி முறைகள், என வேளாண்மைத் துறையின் பல்வேறு பிரிவுகளின் செயல்விளக்கங்கள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. மேலும் இந்த முகாமில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் உழவன் மொபைல் ஆப் வெளியிடப்பட்டது. மேலும் கால்நடை மருத்துவ முகாம், மண் பரிசோதனை முகாம், தோட்டக்கலைத் துறை முகாம், வேளாண் வணிக துறை, பயிர்காப்பீடு உள்ளிட்ட முகாம்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருச்செங்கோடு வேளாண்மை உதவி இயக்குநர் அன்புச்செல்வி, விதை சான்று அலுவலர் ஜெகதீசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

 

 

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!