திருச்செங்கோடு அருகே, விஏஓ ஆபீஸ் முற்றுகை, குடிநீர் வழங்க கோரிக்கை

திருச்செங்கோடு அடுத்த நல்லிபாளையம் பஞ்சாயத்துகு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை சீர் செய்ய கோரி காந்தி ஆசிரமம் புதுப்பாளையம் விஏஓ  ஆபீசை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை செயலாளர்.சத்திவேல் தலைமை வகித்தார். செம்பாம்பாளையம், காந்தி ஆசிரமம் புதுப்பாளையம், நல்லிபாளையம் ஆகிய பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருவதாகவும், குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும், இதனை சீர் செய்ய கோரியும், ரேசன்கடையில் முழுமையாக பெருட்கள் வழங்க வேண்டும். நல்லிபாளையம் விஏஓ நிரந்தரமாக நியமிக்க வேண்டும் எனவும் ஊராட்சி முழுவதும் விவசாய கூலி தொழிலாளர்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் , பழுதாடைந்த மின்விளக்குகள் சரிசெய்திடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேலுசாமி. மாவட்டகுழு உறுப்பினர்கள் செங்கோடன், கோமதி ஒன்றிய செயலாளர் சுரேஷ் . ஒன்றியகுழு உறுப்பினர் சுந்தரம் மற்றும்பெருமாள் .ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

 

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!