திருச்செங்கோடு அருகே, நேற்று முன் தினம் கும்பாபிஷேகம் நடந்த கோயில் கோபுரத்தில் மின்னல் தாக்கி சேதம்

திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம், கருமனூர் பகுதியில் நேற்று முன் தினம் புதியதாக கும்பாபிஷேகம் நடைபெற்ற கோயில் கோபுரத்தில் மின்னல் தாக்கியதால் சேதமடைந்தது.

நாமக்கல் மாவட்டம், திருசெங்கோடு தாலுகா, மல்லசமுத்திரம் அடுத்த கருமனூரில் கூத்தாண்டேஸ்வரர் கோயில், கரிய வரதராஜப் பெருமாள் கோயில், கரிய விநாயகர் கோயில், கரிய காளியம்மன் கோயில், காகத்தலை அம்மன் கோயில்கள் புதிப்பிக்கப்பட்டு நேற்று முன் தினம் திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மண்டலபூஜைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை திருச்செங்கோடு மற்றும் மல்லசமுத்திரம் பகுதியில் பலத்த காற்று, இடி மற்றும் மின்னலுடம் கன மழை பெய்தது. இந்நிலையில் கருமனூர் பகுதியில் பலத்த சத்தத்துடன் இடி ஒன்று கூத்தாண்டேஸ்வரர் கோயில் கோபுரத்தின் மீது தாக்கியது. இதில் கோயில் கோபுரத்தில் விரிசல் விழுந்ததுடன் கோபுரத்தின் ஒரு பகுதில் அமைக்கப்பட்டிருந்த சிற்பம் முற்றிலும் சேதமடைந்தது. கும்பாபிஷேகம் நடந்து ஒரே நாளில் இடி தாக்கி கோபுரம் சேதமடைந்த சம்பவம் கருமனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கோயில் கோபுரத்தை இடி தாக்கியதால் பரிகார பூஜைகள் நடத்த கோயில் நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

 

 

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!