திருச்செங்கோட்டில் சிறுவர்கள் இழுத்த திருட்டுத் தேர் - பக்தர்கள் தரிசனம்

 திருச்செங்கோட்டில் ஆண்டு தோறும் பாரம்பரிய வழக்கப்படி சிறுவர்கள் இழுத்துச் செல்லும் திருட்டுத் தேர் என அழைக்கப்படும் அம்மன் தேர் நேற்று இழுக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 திருச்செங்கோடு பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா கடந்த மே 7 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் தேர் இழுக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.திருச்செங்கோடு வைகாசி விசாகத் தேர்த் திருவிழாவின் முன்னோட்டமாக நடக்கும் இந்த தேரோட்டத்தின் பொழுது எட்டு திக்கு பாலகர்களுக்கும் பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து தேரினை சிறுவர்கள் பொதுமக்கள் இழுத்துச் சென்றனர். ஆங்காங்கே பக்தர்கள் நின்று தேரில் பவனி வந்த அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.

பல நூற்றாண்டுகளாக பத்ரகாளியம்மன் திருவிழாவை ஒட்டி அம்மாவாசை இரவில் கிருத்திகை நட்சத்திரம் வரும் நாளில் அம்மன் தேர் இழுக்கப்படுவது வழக்கம். இந்த தேரினை சிறுவர்கள் மட்டுமே  நான்கு ரதவீதிகள் வழியாக இழுத்துச் செல்வர். தேர் செல்லும்  வீதிகளில் மின் தடை ஏற்படுத்தப்பட்டு இருளில் தேர் இழுத்து செல்லப்படுவது பாரம்பரிய வழக்கமாகவே கடைபிடிக்கப்பட்டு வந்தது. அம்மாவாசை இருளில் விளக்குகள் இல்லாமல் இத்தேர் இழுத்துச் செல்லப்படுவதால் இருட்டுத் தேர்  என அழைக்கப்பட்டு நாளடைவில் மருவி  திருட்டுத் தேர் என அழைக்கப்பட்டது.

தொன்று தொட்டு பாரம்பரிய வழக்கமாக இருளில் இழுக்கப்பட்ட அம்மன் தேர் கடந்த ஏழு ஆண்டுகளாக பகலில் இழுக்கப்பட்டு வருவது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *