நீரா தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி.

நீராபானம் தயாரிப்பது குறித்த பயிற்சி, திருச்செங்கோடு அடுத்த கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி நடேசன் என்பவரது தோட்டத்தில் நடந்தது. திருச்செங்கோடு வேளாண்மை துறை சார்பில் நடைபெற்ற இந்த முகாமிற்கு உதவி வேளாண்மை அலுவலர் அன்புசெல்வி தலைமை வகித்தார். உதவி அலுவலர்கள் முருகேசன், அப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் ஹேமலதா, உதவி மேலாளர் ப்ரீத்தி ஆகியோர் பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.  முகாமில் தென்னை விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும் வகையில், மதிப்பு கூட்டப்பட்ட நீரா பானம் தயாரிப்பது குறித்த, தொழில் நுட்ப பயிற்சி வழங்கப்பட்டது. சத்தியமங்கலத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் நீராபானம் தயாரிக்கும் முறை, அதனால் விவசாயிகளுக்கு கிடைக்கும் வருமானம், தென்னையில் இருந்து சர்க்கரை தயாரிக்கும் முறை, அதை சந்தைப் படுத்தும் வழிமுறைகள் ஆகியவை குறித்து விளக்கமளித்தார். இந்த பயிற்சி முகாமில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!