ப்ளஸ்டூ பொதுத் தேர்வு, திருச்செங்கோடு வித்யாவிகாஸ் பள்ளி மாணவர்கள் சாதனை

 ப்ளஸ்டூ பொதுத் தேர்வில் திருச்செங்கோடு வித்யாவிகாஸ் மேல்நிலைப்பள்ளி அறிவியல் பிரிவு மாணவன் 1179 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும் பள்ளியில் 200க்கு 200 மதிப்பெண்கள்  74 மாணவர்களும், 1170 மதிப்பெண்களுக்கும் மேல் 13 மாணவர்களும், 1150 மதிப்பெண்களுக்கும் மேல் 47 மாணவர்களும்,1100 மதிப்பெண்களுக்கும் மேல் 225 மாணவர்களும், 1000 மதிப்பெண்களுக்கும் மேல் 705 மாணவர்களும் மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

ப்ளஸ்டூ பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளை வித்யாவிகாஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சிங்காரவேல், செயலாளார் டாக்டர் குணசேகரன், மேலாண்மை இயக்குநர்கள் டாக்டர் ராமலிங்கம், டாக்டர் முத்துசாமி, இயக்குநர் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி டாக்டர் பழனியப்பன் , இயக்குநர் ஞானசேகர், சீராளன், தலைமையாசிரியர் பிரபுலிங்கம், அருணாசலம், மேகலா மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டினர்.

 

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!