வைகாசி விசாகத் திருவிழாவை ஒட்டி, திருச்செங்கோட்டில் கண்ணகி விழா.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் தேர்த் திருவிழாவினை ஒட்டி கண்ணகி விழாக் குழுவினர் சார்பில் கைலாசநாதர் கோயில் அரங்கத்தில் கண்ணகி விழா நடைபெற்றது.

விழாவிற்கு கண்ணகி விழாக்குழுத் தலைவர் என்.பி.எஸ்.பொன்னுசாமி தலைமை வகித்தார். கேஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ரங்கசாமி, வித்யாவிகாஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சிங்காரவேல், தொழிலதிபர் ஜான்சன்ஸ்.நடராஜன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் முருகேசன், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு அச்சகத்தின் தலைவர் சபரி.தங்கவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் சிலப்பதிகாரத்தில் பெண்களின் பெருமை என்ற தலைப்பில் தேசமங்கையர்கரசி சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து ஸ்ரீநடராஜ நாட்டியாலயா நடனப்பள்ளி மாணவிகள் பூர்ணவி, தாணுவி, வைபவி, ஹர்சிதா, விபிதா, ஹன்சுஜா, மீனாட்சி, தீப்னி ஆகியோரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்கள் விழாவில் பங்கேற்றனர்.

.

புகைப்படம் : ஜெ.ஜெயக்குமார்

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!