திருச்செங்கோடு வைகாசி விசாகத் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருச்செங்கோடு வைகாசி விசாகத் தேர்த் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

            திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாகத் திருவிழா ஆண்டு தோறும் வெகு விமர்சயாக நடைபெற்று வருகிறது. வழக்கம் போல் இத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 14 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முதல்நாள் நிகழ்ச்சியாக நேற்று திருச்செங்கோடு மலையில் கொடியேற்று விழா நடைபெற்றது.  இந்த விழாவில் செங்கோட்டுவேலவர், அர்த்தநாரீஸ்வரர், ஆதிகேசவபெருமாள் ஆகிய சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து எழுகரைநாடு செங்குந்தர் முதலியார்கள் உபயமாக வழங்கிய கொடிச்சேலையை கொண்டு செங்கோட்டுவேலவர் சந்நிதானத்திற்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள தங்க கொடிமரத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத கொடியேற்றப்பட்டது.இதனையடுத்து அர்த்தநாரீஸ்வரர் சந்திதானத்தின் முன்பு அமைக்கப்பட்டுள்ள தங்க கொடிமரத்திலும் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இந்த விழாவின் பொழுது அர்த்தநாரீஸ்வரர் சுவாமி வெள்ளி சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான நான்காம் நாள் திருவிழா அன்று செங்கோட்டுவேலவர், அர்த்தநாரீஸ்வரர், ஆதிகேசவ பெருமாள் ஆகிய சுவாமிகள் திருமலையிலிருந்து நகருக்கு எழுந்தருளுகின்றனர்.10 ம் நாள் திருவிழா அன்று அர்த்தநாரீஸ்வரர் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்வு நடக்கிறது.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருக்கின்றனர்.திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியாக சுவாமிகள் தங்கள் பரிவாரங்களுடன் திருமலைக்கு எழுந்தருளுகின்றனர்.

திருவிழாவை ஒட்டி கம்பன் விழாவும், கண்ணகி விழா, வள்ளலார் விழா, சேக்கிழார் விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள்  நடைபெற உள்ளது.

 

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!