எலச்சிபாளையத்தில், நூறு நாள் வேலை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்.

எலச்சிபாளையத்தில், நூறு நாள் வேலை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் யூனியன் ஆபீஸ் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில்  எலச்சிபாளையம் ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 2018ம் ஆண்டுக்கான வேலைகள் உடனடியாக வழங்கவேண்டும் ,மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்த பட்ச ஊதியம் தினசரி ரூ224 முழுமையாக வழங்க வேண்டும்,பணியிடத்தில் மருத்துவ வசதி, அடிபடைவசதிகள் செய்து தர வேண்டும்,அனைத்து தொழிலாளர்களுக்கும் ஆண்டுக்கு 200நாட்கள் வேலை வழங்க  வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.   

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநிலசெயற்குழு உறுப்பினருமான தங்கவேல் , நாமக்கல் மாவட்ட செயலாளர் கந்தசாமி .மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேலுசாமி மாவட்ட குழுஉறுப்பினர் செங்கோடன் ,கோமதி மற்றும் கட்சியின் ஒன்றியகுழு உறுப்பினர் சுந்தரம், சுரேஷ் ,வெங்கடாசலம்,ரமேஷ் ,செல்வம் , சத்திவேல் உட்பட மூன்னூறுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில்  பங்கேற்றனர். பின்னர் பிடிஓவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!