எலச்சிபாளையத்தில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு காரணமான காவல்துறையை கண்டித்து  நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த   எலச்சிபாளையத்தில்  ஆர்ப்பாட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் சுந்தரம் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேலுசாமி ஒன்றிய செயலாளர் சுரேஷ்.மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் சுரேஷ் வெங்காடசலம் ரமேஷ் சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துகுடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி தொடர்ந்து போராடி வரும் அப்பகுதி  மக்கள் மீது கண்மூடித்தனமாக போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கிச் சூட்டினை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. போராட்டத்தில் 30 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

About The Author

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *