திருச்செங்கோட்டில் தொடர் செயின் பறிப்பு - 2 திருடர்கள் கைது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டாரப் பகுதியில் தனியாக செல்லும் பெண்களிடம் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வந்தது. இதனையடுத்து நாமக்கல் மாவட்ட எஸ்பி அருளரசு உத்தரவின் பேரில் திருச்செங்கோடு டிஎஸ்பி சண்முகம் மேற்பார்வையில் போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் திருச்செங்கோடு சங்ககிரி சாலையில் பால்மடை அருகே திருச்செங்கோடு ஊரக காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தின் அந்த இரண்டு பேர் போலீசாரை பார்த்ததும் திரும்பிச் செல்ல முயன்றனர். அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார் இருவரிடமும் தீவர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சேலம் மாவட்டம், எடப்பாடி அடுத்த எட்டிக்குட்டை பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் முருகேசன்(32), சங்ககிரி அடுத்த கண்ணந்தேறி பகுதியைச் சேர்ந்த பட்டதாரி துரை(29) என்பதும் தெரியவந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் கூட்டப்பள்ளி பாப்பாத்தி, எளையாம்பாளையம் பூமலாதேவி, கருமாகவுண்டம்பாளையம் தீபா உள்ளிட்ட பல பெண்களிடம் இருந்து தங்க செயின்களை பறித்துச் சென்றது தெரியவந்தது. மேலும் இருவரிடம் இருந்து 23 சவரன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!