அர்த்தநாரீஸ்வரர் திருத்தேர் நிலை சேர்ப்பு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.

கொங்கு மண்டலத்தின் முக்கிய திருவிழாவான திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் தேர்த்திருவிழா கடந்த மாதம் 20 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 14 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினசரி கட்டளைதாரர்களின் நிகழ்ச்சிகள் நடந்தது. முக்கிய நிகழ்வான அர்த்தநாரீஸ்வரர் திருத் தேர் இழுக்கும் நிகழ்ச்சி கடந்த29 ம் தேதி தொடங்கி மூன்று தினங்களாக நடைபெற்றது. நான்கு ரத வீதிகள் வழியாக இழுக்கப்பட்ட தேர் நேற்று நிலை சேர்க்கப்பட்டது. தேர் நிலை சேர்ந்த போது அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் ஒரே நேரத்தில் கை தூக்கி வழிபட்டனர். இதேபோல் செங்கோட்டுவேலவர் மற்றும் ஆதிகேசவ பெருமாள் தேர்களும் நிலை சேர்க்கப்பட்டன. இன்று 1.6.2018 வசந்தோற்சவம் நிகழ்ச்சியும் நாளை 2.6.2018 சனிக்கிழமை அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டு வேலவர், ஆதிகேசவ பெருமாள் சுவாமிகள் திருமலைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

About The Author

You might be interested in

Comment (1)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!