திருச்செங்கோடு டிசிஎம்எஸ்சில் ரூ.50 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்.

திருச்செங்கோடு டிசிஎம்எஸ் வளாகத்தில்  நடபெற்ற ஏலத்தில் 1062 மூட்டை மஞ்சள் ரூ.50 லட்சத்திற்கு விற்பனையானது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாரம் தோறும் சனிக்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது.  இன்று 2.6.2018 நடைபெற்ற ஏலத்தில் பரமத்திவேலூர், ஜேடர்பாளையம், நாமக்கல், சேலம் மாவட்டம் ஆத்தூர், கெங்கவல்லி, மேட்டூர், பூலாம்பட்டி, விழுப்புரம் மாவட்டம் கூகையூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி மாவட்டம் பொம்மிடி மற்றும் அரூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மஞ்சள் விவசாயிகள் தங்களது மஞ்சள் மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

அதேபோல், மஞ்சள் கொள்முதலுக்காக ஈரோடு உள்பட பல்வேறு ஊர்களிலிருந்து 35க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர்.  பின்னர், நடைபெற்ற ஏலத்தில் விரலி ரகம் குவிண்டால் ரூ.7102 முதல் ரூ.8589 வரையிலும்,கிழங்கு ரகம் ரூ.6777 முதல் ரூ.7722 வரையிலும் , பனங்காளி ரூ.14099 முதல் ரூ.18999 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் 1062 மூட்டை மஞ்சள் ரூ.50 லட்சத்திற்கு விற்பனையானதாகவும், விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாகவும், மற்ற ஊர் மஞ்சள் மார்க்கெட்டுகளை விட விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ300 வரையிலும் அதிகம் விலை கிடைத்தாகவும் டிஎசிஎம் எஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!