தாங்கள் பயின்ற பள்ளியை மறக்காத மாணவர்கள், ஸ்மார்ட் வகுப்பு ஏற்படுத்தி மகிழ்ச்சி

கிளிக் செய்தால் போதும் தள்ளுபடி விலையில் வீட்டிற்கு தேவையான தரமான பொருட்கள் கிடைக்கும்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குருசாமிபளையத்தை சேர்ந்த இளஞ்செழியன், ஜெயபிரகாஷ், மாதேஸ்வரன், இளங்கோ, குமரேசன் சிவபிரகாசம், நல்லசிவம், சந்திரசேகர் மற்றும் பாலசுப்ரமணி ஆகியோர் 1 ம் வகுப்பு முதல் பள்ளி இறுதி படிப்புவரை ஒன்றாக படித்தவர்கள் இவர்கள் தற்பொழுது அரசு மற்றும் தனியார் துறைகளில் பணி புரிந்து வரும் சூழ்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக தங்கள் பகுதியில்  சமூக சேவை செய்வதற்காக நண்பர்கள் குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் பல்வேறு நலதிட்டங்களையும் உதவிகளையும் செய்து வருகின்றனர் இந்நிலையில் தமிழக அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவித்துள்ள நிலையில் தாங்கள் பயின்ற குருசாமிபாளையம் செங்குந்தர் மகாஜன துவக்க பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி என்பதால் ஸ்மார்ட் வகுப்பிற்கான  உபகரணங்கள் அரசிடமிருந்து கிடைக்க தாமதம் ஆகும் என்பதால் குருசாமிபாளையம் செங்குந்தர் மகாஜன துவக்க பள்ளிக்கு தங்கள் நண்பர்கள் குழு மூலம் சுமார் 60 ஆயிரம் ரூபாய் செலவில் 12 மேஜைகளும் 75 இருக்கைகளும் வழங்கி உள்ளனர். இது குறித்து நண்பர்கள் குழுவினை சேர்ந்த ராசிபுரம் பிஎஸ்என்எல் ஊழியர் மாதேஷ் கூறுகையில் நாங்கள் படித்த காலத்திலிருந்து இன்று பல்வேறு இடங்களில் பணி புரிந்தாலும் பங்குனி உத்திர திருவிழாவில் ஒன்றினைந்து  மகிழ்வோம் அப்பொழுது தங்கள் பகுதிக்கு தேவையான நற்பணிகள் செய்வோம் அவ்வாறு இந்த ஆண்டு சந்திப்பின் போது தான் ஸ்மார்ட் வகுப்பிற்கான உபகரணங்கள் வழங்குவது குறித்து முடிவு செய்து இன்று வழங்கியுள்ளோம் என்றார்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!