குழந்தைகள், மாணவிகள் கடத்தப்படுவதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை – எஸ்பி எச்சரிக்கை.

நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைகள்,பள்ளி மாணவிகள் கடத்தப்படுவதாக,வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் எஸ்.பி அருளரசு  எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து நாமக்கல் மாவட்ட எஸ்.பி அருளரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
ரூ.1000 தள்ளுடி மற்றும் பல சலுகைகளுடன் Vivo Y83 (Black) மொபைல் போன்
 நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி, மங்களபுரம், எலச்சிபாளையம், மல்லசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், 10 வகுப்பு முடித்த 9 மாணவிகள் கடத்தப்பட்டு உள்ளதாக வாட்ஸ் அப்பில் தொடர்ந்து தகவல் பரவி வருகிறது. இது பொதுமக்களை  பீதி அடைய செய்யும் வகையில் உள்ளது.இதுதொடர்பாக நடத்தப்பட்ட  விசாரணையில், ராசிபுரம் பகுதியிலோ நாமக்கல் மாவட்டத்திலோ இதுவரை பள்ளி செல்லும் மாணவிகள் கடத்தப்பட்டுள்ளதாக எவ்வித புகார்களும் பெறப்படவில்லை என தெரியவந்துள்ளது. மாறாக பள்ளி செல்லும் மாணவிகள் காதல் வசத்தினால் வீட்டைவிட்டு சென்றுள்ளதாக மட்டுமே சில புகார்கள் வந்துள்ளது.குறிப்பாக 10 வகுப்பு முடித்த மாணவிகள் 9 பேர் மற்றும் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாக பரப்பப்படும் செய்தியில் உண்மையில்லை.

எனவே பொதுமக்கள் வெளியூரில் இருந்து வரும் நபர்களை, முறையாக விசாரிக்காமல் சந்தேகப்பட்டு பிடித்து கட்டிவைத்தல் மற்றும் அடித்து உதைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு, வெளியூர் நபர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது.சந்தேகம் அளிக்கும் படி யாராவது ஊருக்குகள் வந்தால்அது பற்றி காவல்கட்டுபாட்டு அறையை 100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம். வெளியூர் நபர்களை முறையான விசாரணையின்றி, அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் விதத்தில், பொதுமக்கள் நடந்து கொண்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வாட்ஸ் அப்பில் ஆதாரமற்ற வதந்திகளை பரப்பும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!