தனியார் பேருந்தை சேதப்படுத்திய 6 பேர் கைது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள கரட்டாங்காடு பகுதியில் கடந்த 30 ம் தேதி தனியார் பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் அதே பகுதியினை சேர்ந்த சிவா என்பவர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் விபத்திற்கு காரணமான தனியார் பேருந்தினை கற்களால் தாக்கி சேதபடுத்தினர். இதில் பேருந்தின் ஓட்டுனர் மாதப்பன் பலத்தகாயமடைந்தார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட முருகன்,முரளி,ரமேஷ் உள்ளிட்ட 6 பேரை இன்று பள்ளிபாளையம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!