கரும்பு விவசாயிகள் பிரச்சனை தீர்க்க ரூ.8 ஆயிரம் கோடி மத்திய அரசு ஒதுக்கியது.

நாடு முழுவதும் உள்ள கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு ஆலைகள் பல ஆயிரம் கோடிக்கும் மேல் நிலுவைத் தொகை வழங்காமல் இருந்து வருகின்றன. நிலுவைத் தொகை கேட்டு விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இன்னிலையில் இன்று டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் கரும்பு விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்க ரூ.8 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.உடனடியாக இந்த நிதியைப் பெற்று கரும்பு ஆலைகள் விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் கரும்புக்கு குறைந்தபட்ச விலையாக கிலோவிற்கு ரூ.29 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கரும்பு விவசாயிகள் கூறியதாவது. நாடு முழுவதும் உள்ள சர்க்கரை ஆலைகள்  ரூ. 1 லட்சம் கோடிக்கும் மேல் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழஙகாமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றன. தற்போது கரும்பு விவசாயிகள் அதிகம் உள்ள மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் பாஜ கட்சி பின்னடைவை சந்தித்து வருகின்றது. இதனை சமாளிக்க இப்படியான அறிவிப்பினை மத்தியரசு வெளியிட்டிருப்பதாகவும். கரும்பு விவசாயிகள் பிரச்சனை தீர்க்க கூடுதல் நிதி ஒதுக்குவதுடன் சர்க்கரை இறக்குமதியை தடை செய்து ஏற்றுமதியை ஊக்கப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தனர்

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!