குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரி மாணவர்கள் போராட்டம்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கல்வியியல் கல்லூரியில் இரண்டாவது ஆண்டு முடித்த மாணவ –  மாணவிகள் கல்லூரியின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் அரசு கல்வியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆசிரியர் பயிற்சி பெற்று வருகின்றனர். இன்று இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்விச் சான்று மற்றும் கல்லூரி மாற்றுச் சான்றிதழ் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கல்லூரிக்கு வந்த மாணவர்களுக்கு தற்போது முதல்வர் (பொ) வகிக்கும் கலைச்செல்வி சான்றிதழ்கள் வழங்க மறுப்பதாகவும், பெற்றோரை அழைத்து வந்தால்தான் சான்றிதழ்கள் வழங்கப்படும் என அலைக்கழிப்பதாகவும், வெளி மாவட்டங்களில் இருந்து பல மாணவர்கள் சான்றிதழ் பெற வந்துள்ள நிலையில் தங்களது  கல்வி சான்றுகளை வழங்க மறுப்பதால் தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், கல்லூரிக்கு நிரந்தர முதல்வர் நியமிக்க வேண்டும், தற்போது பயின்று வரும் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தியும் கல்லூரியின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *