மும்பை செல்லும் லாரிகளுக்கு எச்சரிக்கை. பலத்த மழை பாதிப்பு இருக்கும் என மழை ஆய்வாளர் தகவல்.

பலத்த மழையால் மும்பை கடுமையாக பாதிக்கும் என மழை ஆய்வாளர் ஷாஜூ சாக்கோ தெரிவித்துள்ளார்.

பெங்களுரைச் சேர்ந்தவர் ஷாஜூ சாக்கோ, மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர் மழை குறித்தும் பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறார். தனது தமிழ்நாடு வானிலை (https://www.facebook.com/vaanelai/) என்ற முகநூல் பக்கத்தில் அவ்வப்போது துள்ளியமான மழை மற்றும் வானிலை நிலவரங்களை வெளியிட்டு வருகிறார். கடந்த ஜூன் 1 ம் தேதி அவர் வெளியிட்டுள்ள வானிலை குறித்த கணிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

டபோலி (Dapoli) முதல் மும்பை வரையுள்ள கடலோர மாவட்டங்களில் அதை ஒட்டியுள்ள உள் நகரங்களிலும் (புனே வரை)  வரும் ஜூன் 7ம் தேதி முதல் 12ம் தேதி வரை தொடர் மழைக்கு சாத்தியம் உள்ளது. இந்த நாட்களில் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது வரலாறு காணாத அளவிற்கான கன மழையாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் மும்பையில் நாளை 7.6.2018 வியாழக்கிழமை முதல் மழை தொடங்கும்.. சனிக்கிழமை ஜூன் 9 அன்று மிக கனமழைக்கு வாய்ப்புண்டு. இது தொடர் மழையாக ஜூன் 13 வரை தொடரும்  ஆகவே மும்பை மற்றும் மும்பை வழியாக பயணம் மேற்கொள்பவர்கள் பயணங்களை தவிர்க்கவும். என குறிப்பிட்டுள்ளார்.

லாரி ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை.

நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் இருந்து மும்பை வழியாக லாரிகளை இயக்கும் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மும்பை வழியான பயணங்களை ஜூன்  7 ம் தேதி முதல் ஜூன் 13 ம் தேதிவரை தவிர்ப்பது நல்லது. கன மழை காரணமாக சாலைகள் பாதிப்படைய வாய்ப்புள்ளதால் லாரி ஓட்டுநர்கள் கவனத்துடன் வாகனங்களை இயக்கவேண்டும். பாதுகாப்பு கருதி மும்பை வழியான பயணங்களை தவிர்க்கலாம்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!