தியேட்டர்களில் ரீலீசாகும் முன்பே இணையத்தில் வெளியானது காலா.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவான காலா திரைப்படம் நேற்று இரவு வெளிநாடுகளிலும் இன்று இந்தியாவிலும் வெளியானது.இந்நிலையில் தமிழகத்தில் தியேட்டர்களில் காலா திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இன்று அதிகாலை 5.25 மணிக்கு இணையத்தில் காலா திரைப்படம் சட்டத்திற்கு புறம்பாக வெளியிடப்பட்டுள்ளது. இதனால் காலா படத்தை தயாரித்துள்ள நடிகர் தனுஷ் மற்றும் ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார். காலா தயாரிப்பு நிறுவனத்தினர் சைபர் கிரைம் காவல்துறையில் இணையத்தில் காலா படம் வெளியாவதை தடை செய்யவும், படத்தினை சட்ட விரோதமாக வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி புகார் கொடுக்கப்பட உள்ளது. நேற்று இரவு கால திரைப்படம் சிங்கப்பூரிலும் வெளியிடப்பட்டது. அப்போது திரையரங்கில் இருந்து ஃபேஸ்புக் லைவ் மூலம் காலா திரைப்படத்தை நேரலை செய்த பிரவீன் என்பவர் சிங்கப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!