புதிய கட்டிடத்தின் கட்டுமானம் சரிந்து தொழிலாளி பலி, ஒருவர் காயம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த சூளைமேடு பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் புதியதாக வீடு கட்டிவருகிறார். வீட்டின் ஒரு பகுதியில் செப்டிக் டேங்க் கட்டும் பணி நடந்து வருகிறது.தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் பகுதியைச் சேர்ந்த டேவிட் மற்றும் சக்திவேல் இருவரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பலத்த மழை பெய்தது இந்நிலையில் எதிர்பாராதவிதமாக கட்டுமானம் சரிந்து இருவர் மீதும் விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளி டேவிட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சக்திவேல் பலத்த காயங்களுடன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *