தலித் வாலிபர் கோகுல்ராஜ் கொலை வழக்கு - 12 பேரின் ஜாமீன் ரத்து.

தலித் வாலிபர் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டவழக்கில் கைதாகி ஜாமீனில்  வெளியே வந்துள்ள  12 பேரின் ஜாமீனை, நாமக்கல் நீதிமன்றம் ரத்து செய்து, அவர்களை மீண்டும் சிறையில்  அடைக்க உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் கோகுல்ராஜ்(23).இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இன்ஜினியரிங் பட்டதாரியான கோகுல்ராஜ் கடந்த 2015 ம் ஆண்டு ஜூன்  24ம் தேதி, திருச்செங்கோடு அருகே ரயில் தண்டவாளத்தில் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இந்தகொலை வழக்கு தொடர்பாக, சிபிசிஐடி போலீசார், மாவீரன் தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ்(41), அவரது தம்பி தங்கதுரை மற்றும் சங்ககிரியை சேர்ந்த அருள்செந்தில், செல்வக்குமார், குமார் என்ற  சிவக்குமார்,  அமுதரசு,  சந்திரசேகர்,  கார் டிரைவர்  அருண்,  சங்கர்,  செல்வராஜ்,  ஜோதிமணி,  ரவி என்கிற ஸ்ரீதர், ரஞ்சித், சதீஷ்குமார், சுரேஷ், பிரபு, கிரி என 17 பேரை கைதுசெய்தனர். இதில் யுவராஜ் திருச்சி மத்திய சிறையிலும், அருண் கோவை சிறையிலும் அடைக்கப்பட்டு உள்ளனர். ஜோதிமணி  அவரது கணவரால், கடந்த ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.

 இந்த வழக்கில்  ஜாமீனில்விடுதலையான 14 பேரின் ஜாமீனை, ரத்து செய்ய வேண்டும் என நாமக்கல் மாவட்ட சிபிசிஐடி போலீசார், மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். நீதிமன்ற விசாரணைக்கு 14 பேரும் சரியாக வருவதில்லை.வேண்டும் என்றே நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகள்  தாமதப்படுவதாக சிபிசிஐடிபோலீசார்  மனுவில் தெரிவித்திருந்தனர். இதையடுத்து 14 பேரும் நீதிமன்றத்தில்  ஆஜராக கோரி  மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.  இந்நிலையில், நேற்று  அமுதரசுவை  தவிர மற்ற 13 பேரும், நாமக்கல் மாவட்டமுதன்மை நீதி மன்றத்தில் ஆஜராகினர். அப்போது செல்வராஜ் தவிர, 12 பேரின் ஜாமீனை ரத்து செய்து நீதிபதி இளவழகன்அதிரடியாக உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் ஆஜாராகாத அமுதரசுக்கு பிடிவாரண்டுபிறப்பிக்கப்பட்டது.

ஜாமீன் ரத்துசெய்யப்பட்டதைதொடர்ந்து, 12 பேரையும் போலீசார்  மீண்டும் சிறையில் அடைத்தனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!