திருச்செங்கோடு ஆர் டி ஓ ஆபீசில் ரெய்டு..

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் (விஜிலென்ஸ் ) திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நீடித்து வருகிறது. அலுவலகம் முடியும் நேரத்தில் திடீரென வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குள் நுழைந்த லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினர். அலுவலகத்தின் முன் வாசல் பகுதியை இழுத்துப் பூட்டினர். இதனால் அலுவலகத்தின் உள்ளே இருந்து யாரும் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. அலுவலகத்திற்குள் பொதுமக்கள், அலுவலர்கள், டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர்கள், புரோக்கர்கள் உள்ளனர். அவர்களிடம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன் அலுவலகம் மற்றும் அலுவலர்களிடம் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் வட்டாரப் போக்குவரத்து அலுவலக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செய்தியாளர் : ஜெ.ஜெயக்குமார்

 

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!