திருச்செங்கோடு ஆர்டிஓ ஆபீசில் விடிய விடிய தொடரும் சோதனை – பல லட்சம் பறிமுதல்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஆர்டிஓ ஆபீசில் நேற்று மாலை தொடங்கிய விஜிலென்ஸ் போலீசாரின் சோதனை இன்று காலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திருச்செங்கோடு ஆர்டிஓ ஆபீசில் பொதுமக்களிடம் இருந்து அதிகளவில் லஞ்சம் பெறப்பட்டுவதாக எழுந்த புகாரினை அடுத்து நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நேற்று மாலை திருச்செங்கோடு ஆர்டிஓ ஆபீசில் திடீர் சோதனை மேற்கொண்டனர். ஆபீசின் பிரதான கதவை பூட்டிய லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆபீசில் இருந்த 30 க்கும் மேற்பட்ட புரோக்கர்கள் மற்றும் ஆர்டிஓ ஆபீஸ் ஊழியர்கள், அலுவலர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். நேற்று விடிய விடிய நடந்த சோதனை இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின் போது ஆபீஸ் கழிவறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பல லட்சம் ரூபாய் நோட்டுக்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்து கணக்கில் வராத ரூபாய் நோட்டுக்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்செங்கோடு ஆர்டிஓ ஆபீசில் பணியில் உள்ள அதிகாரி ஒருவர் புதிய வாகன பதிவு, லைசென்ஸ் எடுக்க மற்றும் ஆண்டு புதுப்பிக்கும் பணிகளுக்கு புரோக்கர்கள் மூலம் கட்டாய வசூலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பாதிப்படைந்தவர்கள் கொடுத்த புகாரின் பேரில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் பல லட்சம் ரூபாய் நோட்டுகள் சிக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!