ஆசிரியை வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் பணம் திருட்டு – போலீசார் விசாரணை.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் , தனியார் பள்ளி ஆசிரியையின் வங்கி கணக்கில் இருந்து, நூதன முறையில் ரூ 17,500 திருடப்பட்டுள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த தெற்கு நல்லியம்பாளையத்தை சேர்ந்தவர் இளங்கோ. இவரது மனைவி தீபா(45). இவர் கரூர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். தீபா கடந்த 6ம் தேதி பள்ளியில் வேலை செய்து கொண்டிருந்த போது, அவரது செல்போனுக்கு தகவல் வந்தது. அதில், வேலூரில் உள்ள பொதுத்துறை வங்கியின் ஏடிஎம் மையத்தில் தீபாவின் கணக்கில் இருந்து  ரூ.17,500 ரொக்கம் எடுத்தாக தகவல் வந்திருந்தது.

இதையடுத்து தீபா, உடனடியாக தனது கணவர் இளங்கோவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அவர் தான் பணம் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த  தீபா, தான் கணக்கு வைத்துள்ள பொதுத்துறை வங்கிக்கு நேரில் சென்று புகார் தெரிவித்துள்ளார். வங்கி அதிகாரிகள் முறையாக பதில் கூறாததால்,இதுகுறித்து  இன்று தீபா, வேலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லட்சுமணகுமார் வழக்கு பதிவு செய்து, ஏடிஎம் கார்டு இல்லாமலும், வங்கி கணக்கிற்கு உரியவர்கள் இல்லாமலும் வங்கியின் ஏடிஎம் மையத்தில் இருந்து பணம் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *