பண்ணைக் கோழிகள் நோய் தாக்குதலில் இருந்து காக்க நடவடிக்கை தேவை – வானிலை மையம் ஆலோசனை.

பண்ணையாளர்கள்  உயிர் பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும் என நாமக்கல் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து,  நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வானிலை ஆலோசனை மையம் வெளியிட்டுள்ள  வானிலை அறிக்கை: நாமக்கல் மாவட்ட வானிலையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன்  காணப்படும். காற்றின் வேகம் சற்று அதிகரித்து காணப்படுவதால் கோழிகளில் தீவன  எடுப்பு இயல்பான அளவிற்கு திரும்ப வாய்ப்புள்ளது.

என்றாலும் தீவனம்  விரயம் ஆகாமல் தடுக்கும் உத்திகளை, தற்போது இருந்தே கடைபிடிக்க வேண்டும்.  தொடர்ந்து  நீர் மேலாண்மையை தீவிரமாக கண்காணித்து, அதன் உபயோகத்தை  கட்டுப்படுத்த வேண்டும். கோழிகள் மேல் மூச்சுக்குழல் அயற்சி நோயின்  தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே,  பண்ணையாளர்கள் அதற்கு தகுந்தாற்போல உயிர் பாதுகாப்பு முறைகளை கையாள  வேண்டும். இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!