என்சிஎம்எஸ்சில் ரூ.13 லட்சத்திற்கு பருத்தி ஏலம்.

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 900 மூட்டை ஆர்சிஎச் ரகம் பருத்தி ரூ.13 லட்சத்துக்கு விற்பனையானது.

நாமக்கல்  வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை பருத்தி ஏலம்  நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற ஏலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மொத்தம் 900 மூட்டை ஆர்சிஎச் ரக  பருத்தியை  விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். திண்டுக்கல், ஈரோடு, திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதியில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் முன்னிலையில்  கூட்டுறவு சங்க அலுவலர்கள் பருத்தி ஏலம் நடத்தினர். இதில் ஆர்சிஎச் ரகம் பருத்தி குவிண்டால்ரூ.4,832 முதல் ரூ.5,706  வரை ஏலம் போனது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டு வந்திருந்த 900 மூட்டை பருத்தி, ரூ.13   லட்சத்துக்கு ஏலம் போனதாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!