திருச்செங்கோட்டில், உலகச்சுற்றுச் சூழல் தின ஓவியப்போட்டி

திருச்செங்கோடு ஜேசிஐ  சஞ்சீவனம் சங்கத்தின் சார்பில் உலக சுற்றுச் சூழல் தின ஓவியப் போட்டி நடைபெற்றது. விழாவிற்கு தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார்.ஓவியப்போட்டியில் திருச்செங்கோடு சுற்று வட்டாரத்தை சேர்ந்த கே.எஸ்.ஆர் மெட்ரிக், அக்சரா, ஒளவை கே.எஸ்.ஆர்  மற்றும் எஸ்.கே.வி, உள்ளிட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். நிலம், நீர், காற்று மாசடைவதில் இருந்து தவிர்க்கும் விதமான ஓவியங்கள், மரம் வளர்த்தல் குறித்த விழிப்புணர்வு ஓவியங்களை மாணவர்கள் வரைந்தனர். இதில் ஹரிநிவேதிதா, சஞ்சீத், அஸ்மிதா சக்தி, ஸ்ரீரேகா ஆகியோர் முதல் பரிசும், சரணிதா,அனுகிருத்தி,அவினிததர்சினி, உமாசங்கர்  ஆகியோர் இரண்டாம் பரிசினையும், தருண்ரித்திவ்,சுபஸ்ரீ,மஞ்சித்கிசோர், ஆகியோர் மூன்றாம் பரிசினையும் பெற்றனர். பரிசுகளை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஜேசிஐ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவிக்குமார் வழங்கி பாராட்டி பேசினார். நிகழ்ச்சியை மாயா அகாடமி ஓவியர் கார்த்திகேயன் ஒருங்கிணைத்தார். செயலர் கந்தசாமி, விழா தலைவர்கள் மணிகண்டன், நித்தியானந்தன் மற்றும் ராஜேஸ்வரி உள்ளிட்ட உறுப்பினர்கள், மாணவர்கள், பெற்றோர்கள்  என பலர் கலந்து கொண்டனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!