பஸ்சில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் படுகாயம். பஸ்ஸை அடித்து நொறுக்கி இளைஞர்கள் போராட்டம்.

அதி வேகமாக சென்ற தனியார்  பஸ்சில் இருந்து இளம் பெண் தவறி கீழே விழுந்து, படுகாயமடைந்ததை அடுத்து ,ஆத்திரமடைந்த இளைஞர்கள் விபத்திற்கு காரணமான பஸ்சை அடித்து நொறுக்கி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஈரோட்டிலிருந்து  திருச்செங்கோட்டிற்கு இன்று மதியம் தனியார்  பஸ்  சென்று கொண்டிருந்தது. அதி வேகத்தில் சென்ற அந்த பஸ்சில்  அளவுக்கு அதிகமான கூட்டம் இருந்ததால் பயணிகள் நின்றபடி பயணம் செய்தனர்.  பள்ளிபாளையம் அடுத்த காடச்சநல்லூர் பஸ் நிறுத்தம் அருகே வளைவில் பஸ் வேகமாக திரும்பியதாகக் கூறப்படுகிறது.  அப்போது, பஸ்ஸில் நின்று கொண்டு பயணம் செய்த கீழ் காலனியை  சேர்ந்த தங்கவேல் மகள் நர்மதா(21) படிக்கட்டு வழியாக தூக்கி வீசப்பட்டார்.  இதில் படுகாயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு, அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  விபத்திற்கு காரணமான பஸ் டிரைவர் அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்த விபத்தால் ஆத்திரமடைந்த காடச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், பஸ்சை அடித்து நொறுக்கி, பஸ்ஸின் இருக்கைகளை சேதப்படுத்த்தினர்.இதனைத் தொடர்ந்து, திருச்செங்கோடு-ஈரோடு சாலையில் செல்லும் தனியார் பஸ்களின் வேகத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!