ராசிபுரம் அருகே துவக்கப்பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த மலையம்பாளையம்  ஊராட்சி ஒன்றிய  துவக்கப்பள்ளியில் அடிப்படைவசதி மற்றும் சேதமடைந்த கட்டிடத்தை சீரமைத்து வலியுறுத்தி  100க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் மாணவர்களுடன் பள்ளி முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட,  மலையம்பாளையத்தில்  ஊராட்சி ஒன்றிய  தொடக்கபள்ளி  செயல்பட்டு வருகிறது.இப் பள்ளியில்  பி.மேட்டூர், கிழக்கு வலசு, தொட்டிய வலசு, மல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார  கிராமங்களை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அடிப்படைவசதிகள்  போதுமான வகுப்பறைகள் இல்லை எனவும், பள்ளி கட்டிடம் சேதமடைந்துள்ளது குறித்தும், பல முறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு  கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்ப்பட்ட பெற்றோர்கள், மாணவர்களுடன் பள்ளி முன்பு அமர்ந்து அதிகாரிகளை கண்டித்து  போராட்டம் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  ராசிபுரம் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியதையடுத்து பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!