புதிய தலைமுறை மீது வழக்குப்பதிவு கண்டித்து நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்.

  உடலையும், உள்ளத்தையும் எப்போதும் இளமையாக வைத்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

புதியதலைமுறை தொலைக்காட்சி சார்பில் கடந்த 8 ம் தேதி கோவையில் நடந்த வட்டமேசை விவாத நிகழ்ச்சி ஒளிப்பதிவின் போது நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த விடாமல் பாஜ கட்சியினர் மற்றும் சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இடையூறு செய்து நிகழ்ச்சியை நிறுத்தினர். இதனையடுத்து நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த புதியதலைமுறை தொலைக்காட்சி, செய்தியாளார் சுரேஷ் மற்றும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரைப்பட இயக்குநர் அமீர் ஆகியோர் மீது ஜாமீனில் வெளிவர இயலாத பிரிவுகளின் கீழ் கோவை மாவட்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோல் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் டிஜிட்டல் ஒளிபரப்பில் 124 வது இடத்தில் ஒளிபரப்பான புதியதலைமுறை தொலைக்காட்சியை 499 வது இடத்திற்கு மாற்றியுள்ளனர். தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து கோவை, சென்னை, திருச்சி என பல்வேறு பகுதிகளிலும் பத்திரிக்கையாளர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மணிக்கூண்டு அருகே வாயில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு தமிழக மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது கருத்து சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரத்திற்கு எதிராக செயல்படும் அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!