நாமக்கல்லில் இரு குழந்தை தொழிலாளர்கள் மீட்பு.

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆசியா மரியம், உத்தரவின் பேரில், தொழிலாளர் நலத் துறை உதவி ஆணையாளர் (பொறுப்பு) சங்கர் தலைமையில் நாமக்கல் -சேலம் சாலை, பதிநகர் பகுதியில்  திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அப்பகுதியில் செயல்பட்டு வந்த வணிக நிறுவனத்தில் இரண்டு குழந்தைத் தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து     பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த சோனு குமார் மற்றும் சுசீத் குமார் யாதவ் என்ற இரண்டு சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இச்சிறுவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். மீட்கப்பட்ட இரு சிறுவர்களுக்கும் கல்வி பயில்வதற்கான உதவிகளை செய்யுமாறும், வயது சான்றின்படி, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளவும் ஆட்சியர் ஆசியா மரியம் உத்திரவிட்டார்.

     இக்கூட்டாய்வில் நாமக்கல் தொழிலாளர் உதவி ஆய்வாளர், மாயவன். தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர், அந்தோணி ஜெனிட் மற்றும் திட்ட களப்பணியாளர்கள் பங்கேற்றனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!