டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுத இலவச பயிற்சி – பயன்படுத்திக் கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தல்.

உடலையும், உள்ளத்தையும் எப்போதும் இளமையாக வைத்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) குரூப்-2 பணிக் காலியிடங்களுக்கான அறிவிப்பினை விரைவில் வெளியிட உள்ளது. இந்த தேர்வு எழுதுவதற்கான இலவச பயிற்சி வகுப்புகள், நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பில் வருகின்ற 13.06.2018 புதன் கிழமை அன்று காலை 10.30 மணியளவில்  நடத்தப்பட உள்ளது. 

       இந்த இலவச பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படவுள்ளது. இவ்வகுப்பில் பயிற்சி கையேடுகள் இலவசமாக வழங்குவதோடு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். 

இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள போட்டித்தேர்வு எழுதும் இளைஞர்கள் மேற்கண்ட இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளுமாறும்,   இவ்வாய்ப்பினை  பயன்படுத்தித் தேர்வில் வெற்றி பெறுமாறும், மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் கேட்டுக்கொண்டுள்ளார். பயிற்சி முகாம் குறித்த தகவல்களை கீழ் கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் 04286 – 222260, 7904800126.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *