அட்மா திட்டத்தின் கீழ் கூட்டுப்பண்ணைய குழு விவசாயிகள் பயிற்சி முகாம்

திருச்செங்கோடு தாலூகா எலச்சிபாளையம் ஒன்றியம் புள்ளாகவுண்டன்பட்டி கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை(அட்மா) திட்டத்தின் கீழ் கூட்டுப்பண்ணையம் பற்றிய பயிற்சி நடைபெற்றது.

எலச்சிபாளையம் வேளாண்மை உதவி இயக்குநர் சத்யபிரகாஷ் இப்பயிற்சியை துவக்கி வைத்து பேசினர்.ஈரோடு அக்காஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் முரளிதரன் சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில் கூட்டுப்பண்ணையம் குழுக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விரிவாக கூறினார். மாதம் ஒருமுறை விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் நடத்தப்படவேண்டும், இக்கூட்டத்தில் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும், உழவர் ஆர்வலர் குழு மற்றும் உழவர் உற்பத்தியாளர்கள் குழு பதிவேடுகளை சரிவர பராமரிக்கப்பட வேண்டும். மேலும் விவசாயிகள் தங்கள் விவசாயத்திற்கு தேவையான உபகரணங்களை குழுக்கள் மூலம் வாங்கி தங்கள் சுற்றுவட்டார விவசாயிகளுக்கு உழவு பணி செய்ய பயன்படுத்தலாம். விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்களை குழுக்கள் மூலம் குறைந்த விலைக்கு வாங்கி தங்கள் சுற்றுவட்டார விவசாயிகளுக்கு விநியோகம் செய்யலாம். கூட்டுப்பண்ணைய குழு உறுப்பினர்கள் ஒன்றினைந்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்க குழு உறுப்பினர்கள் ஒருமனதாக இயக்குனரை தேர்வு செய்ய வேண்டும் என அவர் கூறினார்.

வேளாண்மை வணிக அலுவலர் செந்தில்குமார் கலந்து கொண்டு பேசினார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர்கள் பரமசிவம், ராஜ்குமார், அட்மா தொழில்நுட்ப்ப வட்டார மேலாளர் கிருபா,உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் சோனியா,செல்வகண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!