மொபைல் ஆப் மூலம் மஞ்சள் விற்பனை, முன்னோடியாகும் திருச்செங்கோடு டிஏபிசிஎம்எஸ்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகரம் தற்போது மஞ்சள் விற்பனையில் முதன்மையானதாக மாறிக் கொண்டிருக்கிறது. இதற்கு வித்திட்டுள்ளது திருச்செங்கொடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு மற்றும் விற்பனை சங்கம்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு மற்றும் விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. 1930 ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சங்கத்திற்கு திருச்செங்கோடு, கொங்கணாபுரம், மல்லசமுத்திரம், ஜலகண்டாபுரம் ஆகிய பகுதிகளில் கிளைகள் செயல்படுகின்றன. டிஏபிசிஎம்ஸ் சங்கத்தில் வாரம் தோறும் பருத்தி, நிலக்கடலை, எள், தேங்காய் பருப்பு மற்றும் மஞ்சள் ஆகியவை ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகின்றது. இந்த விற்பனையின் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைப்பதுடன் உடனுக்குடன் பணமும் பட்டுவாட செய்யப்படுகிறது. கடந்த சில வருடங்களாக வாரம் தோறும் சனிக்கிழமைகளில் மஞ்சள் விற்பனையை டிஏபிசிஎம்எஸ் தொடங்கியுள்ளது. இதுகுறித்து டிஏபிசிஎம்எஸ் மேலாண்மை இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்தாவது:-

1930 ம் ஆண்டு முதல் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு டிஏபிசிஎம்ஸ் சங்கம் செயல்பட்டு வருகிறது. சங்கத்தில் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை உரிய முறையில் பாதுகாத்து ஏலம் மூலம் விற்பனை செய்து விவசாயிகள் லாபம் ஈட்ட வழிவகை செய்து தரப்படுகிறது. இடைத்தரகர்களின் குறுக்கீடு இல்லாமல் ஏலம் நடைபெறுவதை உறுதி செய்ய தற்போது மொபைல் ஆப் மூலம் டெண்டர் நடத்தப்படுகிறது. இதனால் விவசாயிகள் நேரடியாக பலன் அடைகிறார்கள். ஆன்லைன் மூலம் நடத்தப்படும் இந்த டெண்டர் முறை மிக ரகசியமாக நடத்தப்படுவதால் வியாபாரிக்கோ, விவசாயிக்கோ டெண்டர் விலை விவரங்கள் தெரியாது. அலுவலகத்தில் உள்ள சர்வர் கம்ப்யூட்டரில் நேரடியாக டெண்டர் விலை விவரங்கள், விவசாயிகளின் மூட்டைகள் குறித்த லாட் விவரங்கள் என அனைத்தும் துல்லியமாக பதிவு செய்யப்பட்டுவிடும். இதனடிப்படையில் விற்பனை நடைபெறுகிறது.

தற்போது திருச்செங்கோடு டிஏபிசிஎம்எஸ்சில் மஞ்சள் விற்பனை ஒளிவு மறைவின்றியும், இடைத்தரகர்கள் இல்லாமலும் நேரடியாக வியாபாரிகள் மொபைல் ஆப் மூலம் ஆன்லைனில் நேரடியாக டெண்டர் கோருவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. வியாபாரிகள் தங்களது செல்போன் மூலம் டெண்டர் கோரமுடியும். இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்கிறது. மேலும் டிஏபிசிஎம்எஸ் நிர்வாகம் மஞ்சள் விவசாயிகளுக்கு டெண்டர் முடிந்தவுடன் உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. விலை படியவில்லை என நினைக்கும் விவசாயிகளின் மஞ்சள் மூட்டைகள் மிகப் பாதுகாப்பாக எமது கிடங்குகளில் வைக்கப்படுகிறது. மேலும் விவசாயி விரும்பினால் கிடங்குகளில் பாதுகாக்கப்படும் மஞ்சள் மூட்டைகள் மீது சரக்கீட்டு கடன் வழங்கப்படுகிறது.தமிழகத்தில் உள்ள மிகப் பெரிய நிறுவனங்கள் நேரடியாக டெண்டரில் கலந்து கொள்வதால் விவசாயிகளுக்கு வெளி மார்க்கெட் விலையை விட கூடுதல் விலை கிடைப்பதால் தற்போது விவசாயிகள் கொண்டு வரும் மஞ்சள் மூட்டைகளின் வரத்து அதிகரித்து வருகிறது. பெரம்பலூர், தர்மபுரி, வேலூர், சேலம், ஊத்தங்கரை, வாணியம்பாடி, திருப்பத்தூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் மஞ்சள் மூட்டைகளை கொண்டு வருகின்றனர். சங்க வளாகத்தில் காத்திருக்கும் விவசாயிகளுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் சங்கத்தின் மூலம் செய்து தரப்பட்டுள்ளது. சங்கத்தின் மூலம் விவசாயிகளிடம் இருந்து 2 சதவீதம் மட்டுமே சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது வெளிமார்க்கெட்டில் 7 சதவீதம் அளவிற்கு சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது கடந்த வாரங்களில் 2500 மூட்டைகள் மஞ்சள் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. வெளி சந்தைகளைவிட கூடுதலான விலைக்கு இங்கு ஏலம் கோரப்படுவதால் விவசாயிகள் நேரடியாக திருச்செங்கோடு டிஏசிபிஎம்எஸ்சிற்கு வருவதாக அவர் தெரிவித்தார்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!