திருச்செங்கோட்டில் ரவுடி கைது

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பொது மக்களை அச்சுறுத்தி வந்த பல்வேறு வழக்குகளில்  தொடர்புடைய ரவுடியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த அப்பூர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவன் பாண்டு(எ)வசந்தகுமார். இவன் மீது கொலை, கொலை முயற்சி, ஆட்கடத்தல்,வழிப்பறி, பொதுமக்களை அச்சுறுத்துதல் என 15 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில் இன்று திருச்செங்கோடு பக்தவசலம் நகர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மாதேஸ் என்பவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.1500 பணத்தை வழிப்பறி செய்துவிட்டு தப்பி ஓடிய பாண்டுவை திருச்செங்கோடு டவுன் போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே கூட்டப்பள்ளி அருகே வாகன சோதனையின் போது தப்பி ஓட முயன்ற பாண்டுவை போலீசார் மடக்கிப்பிடித்தனர். குற்றவாளியை சம்பவம் நடந்து சில மணி நேரத்தில் பிடித்த போலீசாரை எஸ்பி அருளரசு பாராட்டினார்.

 

 

 

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!