தோட்டக்கலைத் துறையின் திட்டப்பணி- மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மற்றும் எலச்சிப்பாளையம் வட்டாரத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்.மு.ஆசியா மரியம் இன்று நேரில்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

எலச்சிப்பாளையம் வட்டாரம், பொம்மம்பட்டி கிராமத்தில் ரேவதி என்பவரின் தோட்டத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் மூலம் 2016-17ம் ஆண்டு நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பந்தல் சாகுபடியில் இருந்த பீர்க்கங்காய் மற்றும் புடலங்காய் வயலை  பார்வையிட்டு  அந்த விவசாயிடம் மகசூல் விவரங்கள் மற்றும் காய்கறிகள் சந்தைப்படுத்தும் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
கிளாப்பாளையம் கிராமத்தில் குமரவேல் விவசாயி சாகுபடி செய்திருந்த நாவல் வயலினையும், தோட்டக்கலைதுறை மூலம் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானியத்தில் வழங்கப்பட்டிருந்த லக்னோ-49 இரக கொய்யா, அடர் நடவு முறையில் நடவு செய்து கவாத்து முறையில் செடியின் உயரத்தை குறைத்து எளிதாக பழங்களை அறுவடை செய்வதையும் பார்வையிட்டார்.

மோளிபள்ளி கிராமத்தில் கணேசன் என்பவர் வயலில் சாகுபடி செய்திருந்த பேரிச்சை பழ மரங்களை பார்வையிட்டு அந்த விவசாயி 400 பேரிச்சை பழ மரங்களை சாகுபடி செய்து அனைத்து மரங்களும் நல்ல காய்ப்பில் உள்ளது. இதற்காக அவர் கடைபிடித்த தொழில்நுட்பங்களை பராட்டினார்
எலச்சிப்பாளையம் வட்டாரம், அகரம் கிராமத்திலுள்ள வெங்கடசலம் என்பவர் வயலில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு அடர் நடவு முறையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மாதுளை பகுவா இரக வயலினை பார்வையிட்டார்

மேலும் திருச்செங்கோடு வட்டாரம் வட்டூர் கிராமத்திலுள்ள பழனியப்பன் என்பவர் வயலில் தோட்டக்கலைதுறை மூலம் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு அடர் நடவு முறையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மாதுளை பகுவா இரக வயலினை பார்வையிட்டார் அப்பொழுது அணில் மற்றும் பறவைகளினால் சேதமடையாமல் இருப்பதற்கு தோட்ட முழுவதும் வலை அமைத்து பாதுகாப்பு செய்து நல்ல மகசூல் பெற்று வருவதை அறிந்து பாராட்டினார்.

    இந்த ஆய்வின் போது தோட்டக்கலை துணை இயக்குநர்.கண்ணன், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை).சுப்ரமணியம், தோட்டக்கலை உதவி இயக்குநர்கள்.புவனேஸ்வரி கே.மஞ்சுளாதோட்டக்கலை அலுவலர்கள்.ஜெயபிரபா, தமிழ்செல்வன் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!