திருச்செங்கோட்டில் அரசு கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி- பொன் சரஸ்வதி எம்.எல்.ஏ கோரிக்கை

தமிழக சட்டமன்றத்தில்  இந்துசமய அறநிலையத்துறை மனிய கோரிக்கை இன்று நடைபெற்றது. மானியக் கோரிக்கையின் போது  திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி கோரிக்கைகளை முன்வைத்து பேசியதாவது,

திருச்செங்கோடு நகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டத்துக்காக ரூ 64.04 கோடி நிதி ஒதுக்கி பணியினை துவங்கியதற்கும்,

மாவட்ட கல்வி அலுவலம் அமைத்திட நடவடிக்கை எடுத்தமைக்கும்,சார்பதிவாளர் அலுவலக புதிய கட்டிடம் அமைந்திடவும்,ஒருங்கிணைந்த வட்டார வேளாண்மை மைய புதிய 
கட்டிடம் கட்டிட நிதி ஒதுக்கியமைக்கும், அரசுக்கு நன்றியினை  தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு கீழ்கண்ட  கோரிக்கைகளை முன் வைத்தார்.

திருச்செங்கோட்டிற்கு அரசு கலைக்கல்லூரியும், அண்ணா பல்கலைக்கழக பொறியியல் உறுப்பு கல்லூரியும்  அமைக்க  கோரியும், திருச்செங்கோடு மலைகோவில் கிரிவலப்பாதையில் மலை புறம்போக்கு நிலத்தில் 40ஆண்டுகளாக வசிக்கும் 883 குடும்பங்களுக்கு மனைபட்ட  வழங்கவேண்டியும், வட்டூர் கஸ்பா பகுதிக்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கவும், காவிரி உபரி நீர் திட்டத்தின் மூலமாக மல்லசமுத்திரம் மங்களம் ஏரி வழியாக வட்டூர் கஸ்பா ஏரிவரை புதியகால்வாய் அமைக்கவும்,மல்லசமுத்திரம் ஆரம்ப சுகாதர நிலையத்தில் புற நோயாளிகளுக்கு புதிய கட்டிடம் அமைத்திடவும்,கூடுதலாக மகப்பேறு கட்டிடம் அமைத்திடவும் கோரிக்கை விடுத்து பேசினார்.மேலும் வைய்யப்பமலை சுப்பிரமணியர் கோவிலுக்கு வாகனங்கள் செல்ல மலைப்பாதை அமைத்திடவும், திருச்செங்கோடு பகுதிக்கு அரசு ஸ்கேட்டிங் பயிற்சி மையம் அமைத்திடவும் கோரினார். கோரிக்கைகளுக்கு  பதிலளித்து பேசிய  இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் புதிய தேர் அமைத்திட ரூ98  லட்சம் மற்றும் விநாயகர் தேர் அமைத்திட 16.50 லட்சம் கொடுப்பதாக உடனடியாக அறிவித்தார்.  விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் திருச்செங்கோடு பகுதியில் அரசு நிலம் 3 ஏக்கருக்கு மேல் இருந்தால் ஸ்கேட்டிங் பயிற்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

 

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!