மல்லசமுத்திரம் வார சந்தையில் கூடுதல் கட்டணம் வசூல் – வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்.

   நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பேரூராட்சியில் புதன் கிழமை தோறும் வார சந்தை செயல்பட்டு வருகிறது சந்தைக்கு சுமார் 100 முதல் 150 வியாபாரிகள் வந்து செல்கின்றனர். இதேபோல் மாமுன்டி, மல்லசமுத்திரம், கொளங்கொண்டை மேட்டுப்பாளையம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் காய்கறிகள் வாங்க வந்து செல்கின்றனர்.

ஏற்கனவே படிப்படியாக சந்தைக்கு வரும் பொதுமக்களின் வரத்து குறைந்து வரும் நிலையில், மல்லசமுத்திரம் பேரூராட்சி சந்தை வரி வசூலை நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி இன்று வாரச்சந்தையின் முன்பு வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போராட்ட குழு ஒருங்கினைப்பாளர் மாணிக்கம் தலைமை வகித்தார். சந்தை வரி வசூல் பேரூராட்சி நிர்ணயித்த கட்டணத்தையே வசூல் செய்ய வேண்டும், சந்தையில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!