18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு சபாநாயகரின் உத்தரவு செல்லும், செல்லாது நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு சபாநாயகரின் உத்தரவு செல்லும் என நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பு. செல்லாது என நீதிபதி சுந்தர் தீர்ப்பு. இரு நீதிபதிகளின் வெவ்வேறான தீர்ப்புகளை அடுத்து மூன்றாவது நீதிபதி இந்த வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவு. மூன்றாவது நீதிபதி விரைவில் நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது.30.09.2017 அன்று நீதிபதி துரைசாமி வழங்கிய இடைக்கால தீர்ப்பு நீடிக்கும். சபநாயகரின் தீர்ப்பில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து. இதனால் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு இன்னும் தாமதமாகும் நிலை உருவாகியுள்ளது.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!